பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்233


    என்னவென்று கேட்டு உபயோகமற்ற வெளிமனதின் ஆலோசனைகளைக்
கேட்க  உள்மனம்   தயாராக  இல்லை.  “அகப்பேயே,  இனி  நீயொன்றும்
சொல்லாதே.  உண்மை  ஞானமார்க்கத்தை நானே உணர்ந்து கொள்கிறேன்”
என்று மனப்போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறான் அதே இளைஞன்.

     இறைவனின்  தாளை  அடையும் மார்க்கத்தை அவனுக்கு உள் மனம்
உணர்த்தியதா?

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
 இறைவன்அடி சேரா தார்”

     இக்குறளுக்கு விளக்கமாக 56வது கண்ணியில்,

“பிறவிதீர வென்றால் - அகப்பேய்
 பேதகம் பண்ணாதே
 துறவியானவர்கள் - அகப்பேய்
 சும்மாவிருப்பார்கள்”

என்று பிறவி தீரும் மார்க்கத்தை உபதேசிக்கிறார் அகப்பேய் சித்தர்.

     இறைவனை  அடையச்  சும்மா  இருந்துவிட்டால்  போதுமா?  வேறு
ஏதேனும் செய்ய வேண்டுமா என்ற உள்மனக் கேள்விக்கு அகப்பேயே,

“தன்னை யறிய வேணும்
     சாராமற் சாரவேணும்

என்று விடையளிக்கிறார்.

     தன்னையறிவதென்றால்  என்ன?  நான்  என்ற  அகந்தையை  நீக்க
வேண்டும்.  நான்  என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை
நீக்க  வேண்டும்.  உயிர்   என்றால்  அவ்வுடலின்  அநித்திய  தன்மையை
உணர்ந்து