பக்கம் எண் :

234சித்தர் பாடல்கள்

அடங்க  வேண்டும்.  பஞ்சபூதக்  கூறுகளை  இந்த  உடல் ஒவ்வொன்றுமே
அழியக்கூடியது  என்று  உணர  வேண்டும். அழியக்கூடிய  இந்த உடம்பின் 
சுகத்திற்காக  இன்னொரு  உயிரை / உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி
அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள்
நிரந்தரமாக அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து
கொள் என்கிறார் அகப்பேய்.

     சரி  என்னை  நான்  உணர்ந்துகொண்டால்  மட்டும் பழி பாவங்கள்
செய்யாமலிருந்திடுவேனோ  என்று  அசட்டுத்தனமாக  கேட்கும் மனத்திடம்
அகப்பேயே,

“உன்னை அறிந்தக்கால்
    ஒன்றையும் சேராயே”

என்று   விடையளித்துத்   தன்னையறியும்   மார்க்கத்தையும்   அகப்பேய்
அறிவிக்கின்றார்.

     “உன்னை அறியும் வகைஉள்ளது சொல்வேனே”

என்று கூறி,

     சரியை,  கிரியை,  யோகம்  ஆகிய  மூன்று  யோக  மார்க்கங்களை
அறிவிக்கின்றார்.

     சரியை என்பது கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதலான நெறி.

     கிரியை என்பது கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதலான நெறி.

     யோகம் என்பது சித்தர் வழிபாட்டு நெறி.

     இந்த   மூன்று   வழிகளில்   ஏதேனும்   ஒன்றைப்  பின்பற்றினால்
தன்னையறிந்து இறைவனை அறிந்து கொள்ள