பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்235


முடியுமோ  என்ற வினாவுக்குச்  சிரிப்பை  விடையாகத்  தருகின்றார்  இந்த
ஞானசித்தர்.

“சரியை ஆகாதே அகப்பேய்
    சா லோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
    கிட்டுவது ஒன்றுமில்லை

யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே”

    சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான
உடற்பயிற்சி  வழிபாட்டினாலும்  போகமாகிய தியான மன வழிபாட்டினாலும்
கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக்
காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண
முடியும் போலும்.

     நமக்குப்  பிறவி என்பது  இறைவன்  அளித்தது. புள்ளாய், பூண்டாய்,
புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே
ஒரு தொடர்கதையாய்  இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து
வாழ்வதால்  பிறவி  எடுப்பது  நின்று  விடாது.  இச்சையற்றவனிடம்  இறை
தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது
என்று  பிறவியை  நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார்
அகப்பேய்.

     இங்கு இன்னுமொரு வினா எழுகின்றது. பெரிய யோகிமான்களெல்லாம்
‘வாசியோகம்’  பற்றி  பிரமாதமாக  சொல்கிறார்களே,  அப்படி வாசியோகம்
செய்பவர்க்கு