இறைவன் எளிதில் புலப்பட்டு விடுவானோ? என்ற நம் கேள்விக்கு, “வாசியிலேறிய படி வான் பொருள் தேடாயோ? அகப்பேய் வாசியி லேறினாலும் வாராது சொன்னேனே” என்று சரியாக விடையளிக்கின்றார். அதுமட்டுமல்ல, அறிவு வடிவான கடவுளைக் கண்டவர்கள் மோட்சமும் வேண்டார்கள். முக்தியும் வேண்டார்கள். தீட்சையும் வேண்டார்கள் என சிவமே சின்மயமானவர்கள் என்று சிவயோக நிலை குறித்தும் பாடுகின்றார். மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள் பிறவித் துன்பம் தீருவதற்கு வழி தீமைகள் செய்யாமை, செருக்கின்மை இப்படி உண்மையான அன்பு நெறியே சைவம். அந்த உண்மை சிவத்தை சாத்திரங்களின் மூலம் காண முடியாது. நமக்குள்ளே கலந்திருக்கும் அந்தச் சிவத்தை அன்பு நெறியினால் மட்டுமே காண முடியும். இதை நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை. உன்மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்பு கலந்திருப்பது போல உன்னுடனேயே இறைவனாகிய சிவபெருமான் இருக்கின்றார். இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக என்று அகப்பேய் சித்தர் தம் பாடலில் ஆனந்த வாழ்வதனை உணர்த்துகின்றார். |