கண்டு கொண்டேனே அகப்பேய் காதல் விண்டேனே உண்டு கொண்டேனே அகப்பேய் உள்ளது சொன்னாயே. | 29 |
| | |
உள்ளது சொன்னாலும் அகப்பேய் உன்னாலே காண்பாயே கள்ளமுந் தீராதே அகப்பேய் கண்டாக்குக் காமமடி. | 30 |
| | |
அறிந்து நின்றாலும் அகப்பேய் அஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் அகப்பேய் போகாதே யுன்னைவிட்டு. | 31 |
| | |
ஈசன் பாசமடி அகப்பேய் இவ்வண்ணங் கண்டதெல்லாம் பாசம் பயின்றதடி அகப்பேய் பாரமது கண்டாயே. | 32 |
| | |
சாத்திர சூத்திரமும் அகப்பேய் சங்கற்ப மானதெல்லாம் பார்த்திட லாகாதே அகப்பேய் பாழ்பலங் கண்டாயே. | 33 |
| | |
ஆறு கண்டாயோ அகப்பேய் அந்த வினைதீர தேறித் தெளிவதற்கே அகப்பேய் தீர்த்தமு மாடாயே. | 34 |
| | |
எத்தனை காலமுந்தான் அகப்பேய் யோக மிருந்தாலென் மூத்தனு மாவாயோ அகப்பேய் மோட்சமு முண்டாமோ. | 35 |
| | |
நாச மாவதற்கே அகப்பேய் நாடாதே சொன்னேனே | |