மந்திர மப்படியே அகப்பேய் வாயைத் திறவாதே. | 66 |
| |
பாழாக வேணுமென்றால் அகப்பேய் பார்த்ததை நம்பாதே கேளாமற் சொன்னேனே அகப்பேய் கேள்வியு மில்லையடி | 67 |
| |
சாதி பேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே ஓதி யுணர்ந்தாலும் அகப்பேய் ஒன்றுந்தா னில்லையடி. | 68 |
| |
சூழ வானமடி அகப்பேய் சுற்றி மரக்காவில் வேழம் உண்டகனி அகப்பேய் மெய்யது கண்டாயே. | 69 |
| |
நானு மில்லையடி அகப்பேய் நாதனு மில்லையடி தானு மில்லையடி அகப்பேய் சற்குரு வில்லையடி. | 70 |
| |
மந்திர மில்லையடி அகப்பேய் வாதனை யில்லையடி தந்திர மில்லையடி அகப்பேய் சமய மழிந்ததடி. | 71 |
| |
பூசை பாசமடி அகப்பேய் போதமே கொட்டமடி ஈசன் மாயையடி அகப்பேய் எல்லாமு மிப்படியே. | 72 |
| |
சொல்ல லாகாதோ அகப்பேய் சொன்னாலும் தோஷமடி இல்லை இல்லையடி அகப்பேய் ஏகாந்தங் கண்டாயே. | 73 |