தத்துவத் தெய்வமடி அகப்பேய் சதாசிவ மானதடி மற்றுள்ள தெய்வமெல்லாம் அகப்பேய் மாயை வடிவாமே. | 74 |
| |
வார்தை யல்லவடி அகப்பேய் வாச மகோசரத்தே ஏற்ற தல்லவடி அகப்பேய் என்னுடன் வந்ததல்ல. | 75 |
| |
சாத்திர மில்லையடி அகப்பேய் சலனங் கடந்ததடி பார்த்திட லாகாதே அகப்பேய் பாவனைக் கெட்டாதே. | 76 |
| |
என்ன படித்தாலென் அகப்பேய் ஏதுதான் செய்தாலென் சொன்ன விதங்களெல்லாம் அகப்பேய் சுட்டது கண்டாயே. | 77 |
| |
தன்னை யறியவேணும் அகப்பேய் சாராமற் சாரவேணும் பின்னை யறிவதெல்லாம் அகப்பேய் பேயறி வாகுமடி | 78 |
| |
பிச்சை யெடுத்தாலும் அகப்பேய் பிறவி தொலையாதே இச்சை யற்றவிடம் அகப்பேய் எம்மிறை கண்டாயே. | 79 |
| |
கோல மாகாதே அகப்பேய் குதர்க்கம் ஆகாதே சால மாகாதே அகப்பேய் சஞ்சல மாகாதே. | 80 |
| |
ஒப்பனை யல்லவடி அகப்பேய் உன்னாணை சொன்னேனே | |