எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. | 8 |
| |
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. | 9 |
| |
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச் சேவித்துக் கொள்வாயடி குதம்பாய் சேவித்துக் கொள்வாயடி. | 10 |
| |
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். | 11 |
| |
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத் தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய் தெண்டனிட்டு ஏத்தடியே. | 12 |
| |
விந்தை பராபர வத்தின் இணையடி சிந்தையில் கொள்வாயடி குதம்பாய் சிந்தையில் கொள்வாயடி. | 13 |
| |
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே கண்ணொளி ஆகுமடி குதம்பாய் கண்ணொளி ஆகுமடி. | 14 |
| |
பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு முத்திசற்று இல்லையடி குதம்பாய் முத்திசற்று இல்லையடி. | 15 |
| |
எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச் சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய் சொல்லாமற் சொல்வாயடி. | 16 |
| |
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச் சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் சந்ததம் வாழ்த்தடியோ. | 17 |