காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை நாணாமல் ஏத்தடியே குதம்பாய் நாணமற் ஏத்தடியே. | 18 |
| |
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத் துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய் துணிவாய்நீ போற்றடியோ. | 19 |
| |
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக் காணிக்கை நன்மனமே குதம்பாய் காணிக்கை நன்மனமே. | 20 |
| |
கடவுள் வல்லபங்கூறல் தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர் மூவரும் ஆவாரடி குதம்பாய் மூவரும் ஆவாரடி. | 21 |
| |
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய் வித்தாகும் வத்துவடி குதம்பாய் வித்தாகும் வத்துவடி. | 22 |
| |
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் குதம்பாய் திருவாகி நின்றது காண். | 23 |
| |
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய் பாருமாய் நின்றதைக் காண். | 24 |
| |
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி குதம்பாய் சிவனாலே ஆகுமடி. | 25 |
| |
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல் புவனத்தில் உண்மையடி குதம்பாய் புவனத்தில் உண்மையடி. | 26 |