காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும் ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய் ஆரணஞ் சொல்லுமடி. | 27 |
| |
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந் தாரணி சொல்லுமடி குதம்பாய் தாரணி சொல்லுமடி. | 28 |
| |
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று மேதினி கூறுமடி குதம்பாய் மேதினி கூறுமடி. | 29 |
| |
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை மந்திரம் போற்றுமடி குதம்பாய் மந்திரம் போற்றுமடி. | 30 |
| |
யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல் சேனையைத் தந்தானடி குதம்பாய் சேனையைத் தந்தானடி. | 31 |
| |
மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே எண்ணளவு வில்லையடி குதம்பாய் எண்ணளவு வில்லையடி. | 32 |
| |
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே சோதியாய் நின்றானடி குதம்பாய் சோதியாய் நின்றானடி. | 33 |
| |
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன் தேவன் அவனாமடி குதம்பாய் தேவன் அவனாமடி. | 34 |
| |
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம் சத்தியம் உள்ளானடி குதம்பாய் சத்தியம் உள்ளானடி. | 35 |
| |
எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள் பொங்கமாய் உள்ளானடி குதம்பாய் பொங்கமாய் உள்ளானடி. | 36 |