கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது குளறி அழியுமடி குதம்பாய் குளறி அழியுமடி. | 74 |
| | |
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் தளர்ந்து விழுந்திடுமே. | 75 |
| | |
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல் சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய் சுருக்கம் விழுந்திடுமே. | 76 |
| | |
கொள்ளை யாகக் கொழுத்தே எழுந்த கண் நொள்ளைய தாய்விடுமே குதம்பாய் நொள்ளைய தாய்விடுமே. | 77 |
| | |
மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும் பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய் பஞ்சுபோல் ஆகிடுமே. | 78 |
| | |
பொன்னாலே செய்யாடி போன்ற உன்கன்னங்கள் பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய் பின்னாலே ஒட்டிவிடும். | 79 |
| | |
நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும் வில்லாய்ப்பின் கூனிவிடும் குதம்பாய் வில்லாய்ப்பின் கூனிவிடும். | 80 |
| | |
முந்தி நடக்கின்ற மொய்ம்பும்சின் னாளையில் குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய் குந்தி இருக்கச் செய்யும். | 81 |
| | |
பிறக்கும்போது உற்ற பெருமையைப் போலவே இறக்கும்போது எய்துவிடும் குதம்பாய் இறக்கும்போது எய்துவிடும். | 82 |