நலம் நிலைமை கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் பாபத்துக்கு ஏதுவடி. | 83 |
| | |
கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள் பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய் பள்ளத்திற் தள்ளுமடி. | 84 |
| | |
பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு இருளாம் நரகமடி குதம்பாய் இருளாம் நரகமடி. | 85 |
| | |
கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும் வற்புள்ள பாவமடி குதம்பாய் வற்புள்ள பாவமடி. | 86 |
| | |
தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது கீழாம் நரகமடி குதம்பாய் கீழாம் நரகமடி. | 87 |
| | |
சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு நித்தம் நரகமடி குதம்பாய் நித்தம் நரகமடி. | 88 |
| | |
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத் தப்பா நரகமடி குதம்பாய் தப்பா நரகமடி. | 89 |
| | |
பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே ஏழாம் நரகமடி குதம்பாய் ஏழாம் நரகமடி. | 90 |
| | |
காயம் எடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத் தீயாம் நரகமடி குதம்பாய் தீயாம் நரகமடி. | 91 |