அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத் துன்பாம் நரகமடி குதம்பாய் துன்பாம் நரகமடி? | 92 |
| | |
பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல் செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு எங்காகும் நல்வழியே குதம்பாய் எங்காகும் நல்வழியே. | 93 |
| | |
மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச் சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய் சாத்திரம் ஏதுக்கடி? | 94 |
| | |
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப் பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் பெண்ணாசை ஏதுக்கடி? | 95 |
| | |
ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக் கப்பறை ஏதுக்கடி குதம்பாய் கப்பறை ஏதுக்கடி? | 96 |
| | |
சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு மான்தோல் ஏதுக்கடி குதம்பாய் மான்தோல் ஏதுக்கடி. | 97 |
| | |
நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத் தாடிசடை ஏனோ குதம்பாய் தாடிசடை ஏனோ? | 98 |
| | |
நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப் பாதக் குறடுமுண்டோ குதம்பாய் பாதக் குறடுமுண்டோ? | 99 |
| | |
தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச் செபமாலை ஏதுக்கடி குதம்பாய் செபமாலை ஏதுக்கடி? | 100 |