பக்கம் எண் :

264சித்தர் பாடல்கள்

பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு
     லங்கோ டேதுக்கடி குதம்பாய்
     லங்கோ டேதுக்கடி?
101
  
               நிலையாப்பொருள்

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
     நாடி வருவதுண்டோ? குதம்பாய்
     நாடி வருவதுண்டோ?
102
  
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
     சாம்போது தான்வருமோ? குதம்பாய்
     சாம்போது தான்வருமோ?
103
  
காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
     தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
     தூசேனும் பின்வருமோ?
104
  
உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
     பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
     பெற்றார்துணை யாவரோ?
105
  
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
     பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
     பொய்ப்பணி ஏதுக்கடி?
106
  
விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
     மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
     மண்ணாசை ஏதுக்கடி?
107
  
சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
     யானையும் நில்லாதடி! குதம்பாய்
     யானையும் நில்லாதடி!
108
  
செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
     தங்காது அழியுமடி! குதம்பாய்
     தங்காது அழியுமடி!
109