கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம் கூடவே வாராதடி! கும்பாய் கூடவே வாராதடி! | 110 |
| | |
தன்னோடு செல்பவை நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால் செல்வன் நிச்சயமே குதம்பாய் செல்வன நிச்சயமே. | 111 |
| | |
செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும் எய்த வருவனவே குதம்பாய் எய்த வருவனவே. | 112 |
| | |
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்தியும் பின்வருமே குதம்பாய் பத்தியும் பின்வருமே. | 113 |
| | |
ஆசையை ஒழித்தல் இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது நிச்சய மாகுமடி குதம்பாய் நிச்சய மாகுமடி. | 114 |
| | |
வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால் நல்ல துறவாமடி குதம்பாய் நல்ல துறவாமடி. | 115 |
| | |
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய் ஓசையைக் கேட்டிலையோ? | 116 |
| | |
தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே பாக்கிய வான்களடி குதம்பாய் பாக்கிய வான்களடி. | 117 |
| | |
இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத் துன்பங்கள் உண்டாமடி குதம்பாய் துன்பங்கள் உண்டாமடி. | 118 |