துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல் பிறவிகள் இல்லையடி குதம்பாய் பிறவிகள் இல்லையடி. | 119 |
| | |
தவநிலை கூறல் கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல் நல்ல விரதமடி குதம்பாய் நல்ல விரதமடி. | 120 |
| | |
தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள் அவநிலை யாவாரடி குதம்பாய் அவநிலை யாவாரடி. | 121 |
| | |
தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச் சிவமது கைவசமே குதம்பாய் சிவமது கைவசமே. | 122 |
| | |
காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு ஏமன் பயப்படுவான் குதம்பாய் ஏமன் பயப்படுவான். | 123 |
| | |
யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு மோகந்தான் இல்லையடி குதம்பாய் மோகந்தான் இல்லையடி. | 124 |
| | |
காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக் கோலங்கள் உண்டாமடி குதம்பாய் கோலங்கள் உண்டாமடி. | 125 |
| | |
ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் சம்புவைக் காண்பாரடி குதம்பாய் சம்புவைக் காண்பாரடி. | 126 |
| | |
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் மெய்யவர் ஆவாரடி குதம்பாய் மெய்யவர் ஆவாரடி. | 127 |