யான் என்ன தென்னும் இருவகைப் பற்றற்றோன் வானவன் ஆவானடி குதம்பாய் வானவன் ஆவானடி. | 128 |
| | |
அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு நகுபிறப்பு இல்லையடி குதம்பாய் நகுபிறப்பு இல்லையடி. | 129 |
| | |
பற்றறில் துன்பமும் பற்றறும் இன்பமும் முற்றாக எய்துமடி குதம்பாய் முற்றாக எய்துமடி. | 130 |
| | |
அறிவு விளக்கம் பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய் மெய்ஞ்ஞானம் வேண்டுமடி. | 131 |
| | |
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய அறிவு பெரிதாமடி குதம்பாய் அறிவு பெரிதாமடி. | 132 |
| | |
தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால் தத்துவ ஞானமடி குதம்பாய் தத்துவ ஞானமடி. | 133 |
| | |
அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று கண்டது அறிவாமடி குதம்பாய் கண்டது அறிவாமடி. | 134 |
| | |
முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே தக்கமெய்ஞ் ஞானமடி குதம்பாய் தக்கமெய்ஞ் ஞானமடி. | 135 |
| | |
போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல் போதமது ஆகுமடி குதம்பாய் போதமது ஆகுமடி. | 136 |