சாதி பேத மின்மை ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம். | 137 |
| | |
பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும் தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய் தீர்ப்பாகச் சொல்வதென்ன? | 138 |
| | |
பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய் தீர்ப்பாய்ப் படைத்தாரடி. | 139 |
| | |
பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. | 140 |
| | |
சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல் தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய் தொட்டிடும் வத்தல்லவே. | 141 |
| | |
ஆதி பரப்பிரமம் ஆக்கு மக்காலையில் சாதிகள் இல்லையடி குதம்பாய் சாதிகள் இல்லையடி. | 142 |
| | |
சாதிவேறு என்றே தரம்பிரிப் போருக்குச் சோதிவே றாகுமடி குதம்பாய் சோதிவே றாகுமடி. | 143 |
| | |
நீதிமானென்றே நெறியாய் இருப்பானே சாதிமா னாவாடி குதம்பாய் சாதிமா னாவாடி. | 144 |
| | |
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய் ஓதி உணர்ந் தறிவாய். | 145 |