தேவநிலை அறிதல் தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது மன்னும் தலத்தெய்வதென்? குதம்பாய் மன்னும் தலத்தெய்வதென்? | 182 |
| |
இருந்த இடத்தில் இருந்தே அறியாமல் வருந்தித் திரிவதென்னோ? குதம்பாய் வருந்தித் திரிவதென்னோ? | 183 |
| |
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ? குதம்பாய் ஈசனைக் காணுவையோ? | 184 |
| |
பூவதில் நாளும் பொருந்தித் திரியினும் தேவனைக் காணுவையோ? குதம்பாய் தேவனைக் காணுவையோ? | 185 |
| |
உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும் வள்ளலைக் காணுவையோ? குதம்பாய் வள்ளலைக் காணுவையோ? | 186 |
| |
போரினில் ஊசி பொறுக்கத் துணிதல்போல் ஆரியன் தேடுதலே குதம்பாய் ஆரியன் தேடுதலே. | 187 |
| |
சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு வேதனை யாகுமடி குதம்பாய் வேதனை யாகுமடி. | 188 |
| |
வேதனை நீங்கி விடாது தொடர்ந் தோரே நாதனைக் காணுவர்காண் குதம்பாய் நாதனைக் காணுவர்காண். | 189 |
| |
நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர் நீடொளி காணுவரே குதம்பாய் நீடொளி காணுவரே. | 190 |