பக்கம் எண் :

284சித்தர் பாடல்கள்

அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த
உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று
மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர்.

     தோண்டியை  உடைத்த  ஆண்டியைப்  போல மேற் கொண்டு என்ன
செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை
அள்ளி விடுகின்றார் சித்தர்.

“தூடணமாகச் சொல்லாதே”
“ஏடணை மூன்றும் பொல்லாதே”

“நல்லவர் தம்மைத் தள்ளாதே”

“பொல்லாங்குச் சொல்லாதே”

“பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே”

“பெண்ணாசைக் கொண்டு அலையாதே”

“மனம் போன போக்கு போகாதே”

“மைவிழியாரைச் சாராதே”

“மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே”

“வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே”

“வைய வினைகள் செய்யாதே”

“பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன்
பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே”

“கஞ்சா புகையாதே”

“வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே”

“மூடனுக்கு அறிவுரைப் புகலாதே”