“சாபங் கொடுத்திடலாமோ - விதி தன்னை நம்மாலே தடுத்திட லாமோ கோபங் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ” கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும். “மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு” என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர். ஆனந்தக்களிப்பு பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. | | | | சாபங்கொடுத்திட லாமோ - விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ கோபந் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ. | பாப | | | சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத் திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். | பாப |
|