நேரப்பா வாதம்வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடா கோடி; ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ? ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி; ஏரப்பா அழுதலோவெள் ளாமை யாகும்? ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சு. | 94 |
| | |
கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங் கைகண்டாற் சொல்வாரே கல்போல் நெஞ்சே! அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால் அவன்கையி லொன்றுமில்லை யறிந்து கொள்ளே; உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம் உதுவான வன்வாதி யுண்மை கேளு; சுதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம் சுடுவான்பார் ரசயோகி ஞானி தானே. | 95 |
| | |
தானென்ற வாதியிலே யிருவ ருண்டு; சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து வானென்ற ஞானமென்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி யாடிக் கானென்ற ராககே ளிக்கை பார்த்துக் கண்டபெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான் உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந் தானே. | 96 |
| | |
நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந் தம்பார்; நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து நலமான தேவிகிரி யையிலே நின்று நரகமென்ன சடமுதல்நா மல்லவென்று நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே. | 97 |
| | |
இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்; இத்தனைக்கும் பொருளெதிவன் வறுமைக் கென்பார்; | |