நாலதான யோனியுள் நவின்றவிந்தும் ஒன்றதாய் ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல் சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. | 238 |
| | |
அருவமா யிருந்தபோது அன்னையங்கு அறிந்திலை உருவமா யிருந்தபோது உன்னைநா னறிந்தனன் குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம் பருவமான போதலோ பரப்பிரம்ம மானதே. | 239 |
| | |
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும் மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும் துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும் பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீட டங்குமே. | 240 |
| | |
கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால் விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன் என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே. | 241 |
| | |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே. | 242 |
| | |
எள்ளிரும்பு கம்பிளி யிடும்பருத்தி வெண்கலம் அள்ளியுண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம் உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான மீதிரால் மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே. | 243 |
| | |
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர் ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே. | 244 |
| | |
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லிரேல் | |