ஆடுஞ் சரக்கு அறுபத்தி னாலும் அவரவர் தாமறிவார் காடு மலையுஞ் செடியுஞ் சரக்கென்பர் காணாதார் காணுவரோ? | 18 |
| |
தானே அறிவது சித்தி இதுவென தத்துவந் தானறிந்தோர் வீணே அலைந்து திரிந்துநம் வேதத்தை விரும்பித் தேடுவரோ? | 19 |
| |
தங்க ளிடத்தில் இருக்கும் பொருள்தனைத் தாங்களே தானறிந்தால் எங்கே இருக்கு தெனச்சொல்லித் தேடி ஏங்கி அலைவாரோ. | 20 |
| |
பண்டு பழுத்த கனியைப் பொசிக்கப் பறிக்கப் பொருள் அறிந்தால் உண்டு சுகித்து உடம்பை வளர்த்து உறங்கித் திறிவாரோ. | 21 |
| |
இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏது மறியார்போல் பித்தனைப் போலவே வத்துவைத் தேடிப் பேசா திருப்பாரோ? | 22 |
| |
தாங்காமல் விட்ட குறையாளர்க்கு எய்திடும் தத்துவத் தைநினைக்க பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம்பெறுவார். | 23 |
| |
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை தனையறிந்தால் நீங்காத செல்வம் நிலைபெற்ற மாதவம் நின்ற பொருளறிவார். | 24 |
| |
எங்கெங்கு பார்த்தாலும் எங்குங்குருநாதன் இருப்பிடந்தானறிந்தோர் | |