பக்கம் எண் :

554சித்தர் பாடல்கள்

பங்கமாய் உள்ள பரம
     சுகத்தையே பார்த்துத் திரிவாரோ?
25
  
அற்பமாய் எண்ணியே கற்பங்கள்
     தேடி அலைவர் வெகுகோடி
சொற்பங்க ளல்ல சுருதி
     முடிவல்லோ சொன்னது கற்பங்கள்தான்.
26
  
வாசம் பொருந்தும் சதுர
     கிரியின் மகத்துவங் கண்டோர்கள்
தேசங்கள் தோறுங் கற்பங்கள்
     தேடித் திரிவரோ தானறிந்தோர்.
27
  
கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும்
     கருத்தைச் சொல்லார்கள்
விண்டிலர் கண்டிலர் வேணது
     சொல்லுவர் வேத முடிவறியார்.
28
  
பாசம் பொருந்தும் கருநெல்லிவெண்சாரை
     பார்த்தோர்க்கு தான்தெரியும்
பேசப் படாதென்று சித்தர்கள்
     சொல்லுவர் பேசத் தெரியார்போல்.
29
  
நீந்தின செந்தூரம் நேரான
     பூரணம் நின்ற நிலையறிந்தால்
சாத்திரம் ஏதுக்குத் தானறி
     யாருக்குச் சகலமும் வேணுமென்பார்.
30
  
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள்
     பூட்டது வேணது உண்டுஇங்கே
பூட்டக்கமின்னதெனத்தெரிந்தோர் சாவி
     போட்டுத் திறந்திடுவார்.
31
  
கண்டபேர் கொண்டதை விண்டுதான்
     பேசுவர் காரியா காரியமாய்
கண்டு மறிந்து மறியாதார்
     போலவே காணாதார் போலிருப்பர்.
32