பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்563


சித்தர் தமது அடுத்த கண்ணியில் சற்று தீவிரமாகவே உபதேசம் செய்கின்றார்.

     இரண்டாவது   பாட்டுத்  தொகுதி   முழுவதும்  பழமொழிகளாகவே
காணப்படுகின்றது.  புதுச்சேரியில் சிறுபிள்ளைகள் கபடி விளையாடும் போது
பாடும் பாட்டு.

உத்தி உத்தி கம்பந்தட்டு
வீட்டை பிரிச்சுக் கட்டு
காசுக்கு ரெண்டு கட்டு
கருணை கிழங்கடா
தோலை உரியடா
தொண்டையிலே வையடா
வையடா வையடா வையடா!

     இந்தப்  பாட்டின்  ஒலியிலே இந்த  இரண்டாவது பாடல் இருப்பதால்
இவர் புதுச்சேரிக்காரரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சுக்குச் சுக்கு வெள்ளைக்கல்
     சுண்ணாம்பு வெள்ளைக்கல்
காசுக் கிரண்டுகல்
     கருணைக் கிழங்கடா கருணைக் கிழங்கடா

     பாட்டைப்  பாடிப்  பாருங்கள்.  ஒற்றுமையும் கருத்துக் கோர்வையும்
புலப்படும்.

    முதல் பதினெட்டில் உலக வாழ்க்கை நிலையையும் வாசி சுழுமுனையில்
செல்லும் மார்க்கத்தையும், குண்டலினியையும் விவரிக்கின்றார். இதில் யோகம்,
தவநிலை ஆகியவற்றை விளையாட்டாகவே விளங்க வைக்க முயற்சி
செய்கின்றார்.

     இரண்டாவது  கண்ணியில்  ஆதிசிவத்தையும்  பிரபஞ்சத்துள்  இடம்,
பொருள், ஏவல் முதலியவை பற்றிய