மெய்ப்பொருள் அனைத்தையும் விளக்க முற்படுகின்றார். மூன்றாவது 17ம் பாடல் தொகுதியில் வாதக்குருடு விபரங்களையும், சுண்ணம் முடிக்கும் விபரங்களையும், அதன் சூட்சங்களையும் விவரிக்கின்றார். பாடல் முழுவதும் கிறுகிறுப்புதான். படித்துப் பார்த்தால் உண்மை நிலை விளங்கும். கண்ணிகள் ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான் அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை | 1 | | | | பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம் பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால் சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச் சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். | 2 | | | | இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன் | 3 | | | | நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த நானிலத் திருப்பதுவும் விளையாட்டே தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. | 4 | | | | தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற் தநயனாய் வந்ததுவும் விளையாட்டே மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே. | 5 | | | | பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த வையகத் திருப்பதுவும் விளையாட்டே. | 6 |
|