பெரியோரைக் காணாததும் விளையாட்டே - கண்டு பேரின்பஞ் சாராததும் விளையாட்டே தெரியா திருந்ததுவும் விளையாட்டே - சிவ தேகநிலை பாராததும் விளையாட்டே. | 31 |
| |
அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே - பே ரறிவாற் றெரியாததும் விளையாட்டே மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே - இந்த மேதினியே போதுமெனல் விளையாட்டே. | 32 |
| |
கண்ணிகள் ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான் வாதியானோன் கண்டறிய வாய்குமிது மந்திரம். | 33 |
| |
சுக்குச்சுக்கு வெள்ளக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல் காசுக் கிரண்டுகல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா. | 34 |
| |
குடுகுடு வானைக்கல் கோமான்கும் பானைக்கல் தேசதேச வாசக்கல் தெக்குநல்ல சீமைக்கல். | 35 |
| |
பக்குவ மாகாமுன் பார்த்தெடுத்துக் கொண்டபின் சுக்குச்சுண் ணாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல் | 36 |
| |
வாகடதோகட மதுரக்கல் வைப்புச்சுண் ணாம்புக்கல் பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் | 37 |
| |
மேலாஞ் சாதி பாரடா வெட்டவெளியைத் தேரடா நாலாஞ்சாதி யாகாது நமக்குப் பருப்பு வேகாது. | 38 |