தாய்போலு மாகுமே தங்கைபோலு மாகுமே சேய்போலு மாகுமே திரும்பப் பெண்டீ ராகுமே. | 39 |
| |
வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்த தோர்பெண்ணாம் பாலைமங்கை தானடா பருவம்வந்த வழலைதான். | 40 |
| |
வழலைவாங்கிக் கொள்ளடா மருந்துசூடன் போடடா குழவியர்க்கு உணர்வதாகக் கொடுத்ததைநீ வாங்கடா. | 41 |
| |
வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே தூங்கிடாமற் சேநீர்கொண்டு சுருக்கினிலுப் பாக்கடா. | 42 |
| |
நீறுநீ ரெடுத்துமே இரண்டையுமொன் றாக்கியே சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா. | 43 |
| |
கோவானூர் தன்னிலே கொழுந்துபோல் முளைத்ததை ஏகாளிகள் போகுமுன் னெடுத்துவந்து காய்ச்சடா. | 44 |
| |
காய்ச்சியும் பெருத்துநீ கஞ்சியுப்பு சேர்த்துநீ மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போலாமடா. | 45 |
| |
ஆதியுப்பு மந்தவுப்பும் இந்தவுப் பெடுத்துநீ சோதியுப்பு மாச்சடா சுருக்கமிது தானடா. | 46 |