பக்கம் எண் :

570சித்தர் பாடல்கள்

கண்டறிந்து கொள்ளடா
     கணக்கறிந்து விள்ளடா
கொண்டறிந்து தள்ளடா
     குருவறிந்து கொள்ளடா.
47
  
சூதங்கட்ட லாகுமே
     சொர்ணஉப்பு மாகுமே
வாதம் வாத மென்றறிந்த
     வாதியேநீ பாரடா.
48
  
விட்டகுறை யானவன்
     மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக் காரனுக்குத்
     தோற்றமே மெய்ஞ் ஞானமே.
49
  

வேறு

ஏகாந்தம் பழம்பழம்
     எழுத்தில்லாதவன் தலைச்சுமை
பெண்டில்லாதவன் பெருவழி
     பிள்ளையில்லாதவன் கைவீச்சு.

50
  
காய்த்தவாழை பூப்பூக்கும்
     காயாதவாழை தானுமில்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும்
     பாய்ச்சாத பயறு தானுமில்லை.
51
  
இறைத்தகிணறு தானூறும்
     இறையாக்கிணறு தானுமில்லை
விதைவிதைத்தால் முளைதேறும்
     விதையாநிலத்தி லொன்றுமில்லை
52
  
அழுதபிள்ளை பால்குடிக்கும்
     அழுகாதபிள்ளைக் கேதுமில்லை
உழுதநிலந்தான் பயிரேறும்
     உழுகாதநிலத்தி லொன்றுமில்லை
53
  
ஆசையுளானுக்கு ரோசமில்லை
     ஆசையிலானுக் கொன்றுமில்லை