விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் அட்டவக்ஷ ரத்துளே அமர்ந்ததே சிவாயமே. | 425 |
| | |
பிரான்பிரா னென்றுநீர் பினத்துகின்ற மூடரே பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய் பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல். | 426 |
| | |
ஆதியில்லை அந்தமில்லை யானநாலு வேதமில்லை சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும் ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே. | 427 |
| | |
அம்மையப்பன் அப்பனீர் அமர்ந்தபோது அறிகிலீர் அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை யானபின் அம்மையப்பன் நின்னையன்றி யாருமில்லை யில்லையே. | 428 |
| | |
நூறுகோடி மந்திரம் நூறுகோடி ஆகமம் நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என்பயன் ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்ததாய் சீரைஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். | 429 |
| | |
முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர் அந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானதும் அந்தவோ ரெழுத்துளே ஏகமாகி நின்றதும் அந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே. | 430 |
| | |
கூட்டமிட்டு நீங்களும் கூடிவேத மோதுறீர் ஏட்டகத்துள் ஈசனு மிருப்பதென் னெழுத்துளே நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே ஆட்டகத்து ளாடிடும் அம்மையாணை உண்மையே. | 431 |
| | |
காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய் ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே. | 432 |