சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர் சேருவார்கள் நாலுபாதச் செம்மை யென்ற தில்லையே சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர் சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே. | 448 |
| | |
திறமலிக்குநாலு பாதம் செம்மையும் திடப்படார் அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே குழியதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல் வெறிகமழ் சடையுடையோன் மெய்ப் பதமடைவரே. | 449 |
| | |
அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே படையுடைய தத்துவமும் பாதங்க ள்அல்லவோ மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல் உடலில் மூல நாடியை உயரவேற்றி ஊன்றிடே. | 450 |
| | |
ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து ஆன்றுதந்தி ஏறிடில் அமுர்தம் வந்திறங்கிடும் நான்றி தென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வ தாகவே. | 451 |
| | |
ஆகமூல நாடியில் அனலெழுப்பி அன்புடன் மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில் தாகமேரு நாடியேகர் ஏகமான வாறுபோல் ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே. | 452 |
| | |
அறிந்துநோக்கி உம்முளே அயன்தியானம் உம்முளே இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார் செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு உம்முளே. | 453 |
| | |
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு ஆதிசக் கரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. | 454 |
| | |
திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில் மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன் | |