மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின் உருவினைப் பயன்இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே. | 470 |
| | |
வாயில்எச்சில் போகவே நீர்குடித்து துப்புவீர் வாயிருக்க எச்சில் போன வாறதென்னது எவ்விடம் வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம் நாதனை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுசொல். | 471 |
| | |
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள் தொடக்கிருந்த தெவ்விடம் சுத்தியானது எவ்விடம் தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல் தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே. | 472 |
| | |
மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில் சாதிபேத மாய்உருத் தரிக்குமாறு போலவே வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே. | 473 |
| | |
வகைகுலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்கு லங்களான நேர்மைநாடியே உணர்ந்தபின் மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுமொன்று கண்டிலீர் நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே. | 474 |
| | |
ஓதும்நாலு வேதமும் உரைத்தசாஸ் திரங்களும் பூததத் துவங்களும் பொருந்தும்ஆக மங்களும் சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் பேதபேத மாகியே பிறந்துழன் றிருந்ததே. | 475 |
| | |
உறங்கிலென் விழிக்கிலென் உணர்வுசென்றொடுங் கிலென் திறம்பிலென் திகைக்கிலென் சிலதிசைகள் எட்டிலென் புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந் திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகள் நினைப்ப தேது மில்லையே. | 476 |
| | |
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர் அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்குகிறீர் செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கு மூடரே. | 477 |