தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரந் தலங்களாய் முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர் வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம் இச்சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே. | 509 |
| |
முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன் அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம் உச்சரித் துளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே. | 510 |
| |
அண்ணலார் அநாதியாய் அநாதிமு னநாதியாய் பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதாகு முன்னலோ கண்ணிலானில் சுக்கிலங் கருத்தொடுங்கி நின்றபின் மண்ணுளோரு விண்ணுளோரு வந்தவாற தெங்கனே. | 511 |
| |
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான் முத்தியான விந்துளே முளைத்தெழுந்து செஞ்சுடர் சித்தினில் தெளிந்தபோது தேவர் கோயில் சேர்ந்தனன் அத்தனாடல் கண்டபோது அடங்கியாடல் உற்றதே. | 512 |
| |
வல்லவாசல் ஒன்பது மருத்தடைத்த வாசலும் சொல்லும் வாசல்ஓரைந்துஞ் சொல்லவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே. | 513 |
| |
ஆதியான தொன்றுமே அனேகரூப மாயமாய்ப் பேதபேத மாயெழுந்து சர்வசீவ னானபின் ஆதியோடு கூடிமீண் டெழுந்து சன்ம மானபின் சோதியான ஞானியரும் சத்தமாய் இருப்பரே. | 514 |
| |
வண்டுபூ மணங்க ளோடு வந்திருந்த தேனெலாம் உண்டுளே அடங்குவண்ண மோதுலிங்க மூலமாய்க் கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லிரேல் பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே. | 515 |
| |
ஓரெழுத்து லிங்கமாக வோதுமக் கரத்துளே ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் | |