வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச் சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே. | 539 |
| |
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே. | 540 |
| |
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே. | 541 |
| |
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர் சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார். | 542 |
| |
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள் தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே. | 543 |
| |
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச் சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே. | 544 |
| |
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர் நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே. | 545 |
| |
எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? | |