பக்கம் எண் :

98சித்தர் பாடல்கள்

கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?            (18-24)

“பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை”

என்று கூறி கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள் என்று
கெஞ்சுகின்றார்.

     இறைவன்  அவ்வளவு  சீக்கிரம்  அழைத்துக்  கொள்வாரா  என்ன?
இன்னும்  அவரது  அருட்புலம்பலைக்  கேட்கும் ஆசைப்பேறும் முதல்வன்
முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.

குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ”(13)

“முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி” (21)

“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி”
உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி (54)

உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி

அந்த இறைவன்
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண்
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி”

என்று தாமறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார். இந்தத் துறவியை இனி நாம்
பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.