பக்கம் எண் :

26தமிழ்ஒளி கவிதைகள்2

விடுவது கொடுமை! கொடுமையாம் அன்றோ! 
       தொழிலா ளர்களின் துயர வாழ்க்கையை
நீக்கிடப் பெரிய நீண்ட போராட்டம் 
       தொடங்கிடச் சங்கம் துணிந்திடும் போதில்
ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா! 
       நீ, யார்பக்கம்? நிகழ்ந்திட வேண்டும்!
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? 
       துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?
ஒதுங்கி நிற்பவர் ஊமையர், பேடியர் 
       பேதையர் ஆவர்! பிறப்பினில் நீயோ
ஊனமிலாத உயர்வலி யுடையோன் 
       உன்னுடைக் கடமையை உதறித் தள்ள
எண்ணிட வேண்டாம்! இப்பொழுதே, நீ 
       எவர்பக்கம்? என் றியம்பிடு வாயே! 

‘தனி நூலிலிருந்து’ - 1948