மஞ்சூரி தலை நகரம் மக்கள்படை வசமாகி
‘சியாங்-கே-ஷேக்’கின்
நெஞ்சத்தில் நெருப்பேற்ற நீள்சீன மதிற்சுவர்கள்
நிமிர்ந்து பார்த்து,
‘அஞ்சாத வீரர்களே வருக’ எனக் கைகாட்டி
அழைப்புக் கூற
செஞ்சேனை வெற்றியொடும் திசையதிர நடக்கின்ற
செய்தி கேளீர்!
செஞ்சேனை அடைகின்ற வெற்றியெலாம் இன்றைக்குச்
செகத்தி லுள்ள
வஞ்சகர்க்கு மரணபயம்; வையத்தின் புதுமுரசம்;
தொழிலா ளர்தம்
நெஞ்சத்தின் ஆசை ஓளி; நிலமங்கை நெஞ்சினிக்கும்
வாகை மாலை!
நஞ்சுதலைப் பரம்பரக்கர் மடிகின்றார்! சத்யயுகம்
எழுக நன்றே!
‘முன்னணி’ - 1948
|