பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 37

வெற்றி முழக்கம்

வேளை வந்தது வேளை - வெற்றி 
       மேவும் நமது தோளை!
ஊளை யிட்ட நரிகள் பல 
       ஊர் திருடிய எலிகள்,
வாளைப் போன்ற நமது - கை 
       வன்மை கண்டு நடுங்கும்
வேளை வந்தது வேளை - வெற்றி 
       மேவும் நமது தோளை!

மன்னர் முடிகள் உடையும் - ஏழை 
       மனிதர் முடிகள் உயரும்!
இன்னல் பட்டு நாளும் - பசி 
       எய்தி உழைத்த தோழர்
சொன்ன படியே நடக்கும் - புது 
       சுதந்திரங்கள் பிறக்கும்!
முன்னேறுவோம் இவ்வேளை - வெற்றி 
       முத்த மிடும்நம் தோளை!

‘முன்னணி’ - 1948