“இன்றைக்குத் தமிழர்களின் திருநாள் என்றே
இயம்பிடுவாய்” எனச்சொல்லிச் கூச்ச லிட்டார்?
“என்றனுக்கு நிலமுண்டா இப்போ” தென்றேன்!
‘இல்லை’ யெனச் சொன்னார்கள்; ஒழிக என்றேன்!
சென்ற பழங்காலத்தின் துயரம் விட்டேன்
தெருமுனையில் ஊர்வலத்தைக் கண்ணாற்
கண்டேன்‘நன்னிலங்கள் உழவர்க்கே!’ என்ற கீதம்
நான்விரும்பும் தோழர்களைக் கண்டு கொண்டேன்!
‘முன்னணி’ - 1949
|