பக்கம் எண் :

100மலரும் உள்ளம்

பறங்கிக் கீற்றைப் போல வானில்
   தெரியும் நிலாவே - உன்னைப்
பக்கு வம்செய் துண்ண லாமோ?
   சொல்லு நிலாவே.

உடைந்து போன கண்ணா டிபோல்
   இருக்கும் நிலாவே - என்
உருவத் தைநீ காட்டு வாயோ?
   சொல்லு நிலாவே.