பக்கம் எண் :

106மலரும் உள்ளம்

பலன்

தருமம் செய்வ தாகக் கூறித்
   தண்ணீர்ப் பந்தல் வைப்பவர்,
கிருமி நிறைந்த நீரை வழங்கின்
   கெடுதல் அதிகம் ஆகுமே.

பிள்ளை யாவும் துள்ளி ஆடப்
   பெரிய திடலை அமைப்பவர்,
முள்ளை நடுவே பரப்பி வைப்பின்
   மோச மாகும் அல்லவோ?

அன்ன தானம் செய்வ தாக
   அறிவித் தோர்கள், புழுவுடன்
மண்ணும் கல்லும் கலந்த சோற்றை
   வழங்க லாமோ? சொல்லுவீர்.

நிறையப் புத்த கங்கள் சேர்ந்த
   நிலையம் ஒன்றில், மக்களின்
அறிவைக் கெடுக்கும் நூல்க ளிருத்தல்
   அந்தோ! மோசம், மோசமே!