பக்கம் எண் :

108மலரும் உள்ளம்

குறத்தி போல உடையு டுத்திக்
   கூடை யோடே வருவாள் - கையில்
   கூடை யோடே வருவாள்.
குறியும் பார்ந்து மனத்தி லுள்ள
   குறைக ளெல்லாம் சொல்வாள் - நம்
   குறைக ளெல்லாம் சொல்வாள்.

ஜிப்ஸி நடனம், பாம்பு நடனம்
   தில்லா னாவும் அறிவாள் - நல்ல
   தில்லா னாவும் அறிவாள்.
தப்பில் லாமல் தாளத் திற்குத்
   தகுந்த படியே அசைவாள் - அவள்
   தகுந்த படியே அசைவாள்.