பக்கம் எண் :

110மலரும் உள்ளம்

பக்தி மிகவும் உடையார் - பழம்
   பாடல் பலவும் அறிவார்.
யுக்தி யுடனே எதையும் - நன்கு
   ஒழுங்காய் முடித்து மகிழ்வார்.

நாட்டுக் கேற்ற தலைவர் - என்றும்
   நன்மை செய்வார். அவர்போல்
வீட்டுக் கேற்ற தலைவர் - இவர்
   மிகவும் நல்ல தாத்தா!