கொடி வணக்கம்
ஓடியே யாவரும் வந்திடுவோம்.
ஒன்றாகச் சேர்ந்திங்கே கூடிடுவோம்.
கூடியே வட்டமாய் நின்றிடுவோம்.
கொடியை நடுவிலே ஏற்றிடுவோம்.
ஏற்றி வணக்கம் செலுத்திடுவோம்.
எல்லோரும் சேர்ந்துமே பாடிடுவோம்.
போற்றிநம் நாட்டினைக் காத்திடுவோம்
புகழெங்கும் பரவிடச் செய்திடுவோம்.
வாழிய தாய்நாடு என்றிடுவோம்.
வாழிய தலைவர்கள் என்றிடுவோம்.
வாழிய விடுதலை என்றிடுவோம்.
வாழ்த்தி வணங்கித் துதித்திடுவோம்.
|