சொந்தநம் நாட்டுச் சகோதரர்கள் - இங்கே
சோற்றுக் கில்லாமல் தவிக்கையிலே
அந்நிய நாட்டுத் துணிகளிலே - நாமும்
ஆசைகொள் ளல்மிக மோசம்என்றார்.
“ஏழைக்கு நாமும் உதவுகிறோம் - என்ற
எண்ணத் துடன்கதர் கட்டிடுவோம்.
நாளையே நாடு செழிப்படையும்” - இது
நம்மகான் காந்தியின் பொன்மொழியாம்.
எல்லோரும் சமமென்று காட்டும் உடை - என்றும்
எளிமையும் கண்யமும் தோன்றும்உடை.
நல்லவர் காந்தி அணிந்தஉடை - இதை
நாமும் அணிந்து நலம்புரிவோம்!
|