பக்கம் எண் :

122மலரும் உள்ளம்

ஆயிரம் ஆண்டு முன்னால்
   அண்ணலார் தோன்றி னாரேல்
மாயமும் செய்தார். அப்பா!
   மந்திரம் செய்தார் என்றே
ஆயிரம் கதைகள் கட்டி
   அதற்குமேல் கூட்டி நீட்டித்
தூயராம் அவர்தம் வாழ்வைத்
   துலக்கமாய் உணரச் செய்யார்.

மந்திர தந்தி ரங்கள்
   மாயமோ இல்லை, தம்பி.
இந்திர ஜால மென்னும்
   எதுவுமே இல்லை, இல்லை.
விந்தைகள் பலவும் செய்தார்
   மிக்கநல் லன்பி னாலே,
தந்தையார் காந்தி யென்றே
   தரணியோர் போற்று கின்றார்.

வெட்டியே தலையை வீழ்த்தல்
   வீரமாம் என்றார் வீணர்.
சுட்டுமே உடலை வீழ்த்தல்
   சூரமாம் - வெறியர் சொன்னார்.