தாத்தாவின்
கோபம்
காசிக்குத் தாத்தாவும்
சென்றுவந்தார் - உடன்
களிப்போடு பிள்ளைகள்
சூழ்ந்துகொண்டார்.
ஆசையாய்க் கூடியே பேசுகையில் - அங்கே
ஆனந்தன்
தாத்தாவைக் கேட்கலுற்றான்.
“அத்தையும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி
அவரைக்காய்
தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்றுவந்தார் - இனி
சிகரெட்
பிடிப்பதே இல்லையென்றார்.
பாட்டியும் காசிக்குச் சென்றுவந்தாள் - இனி
பாகற்காய்
தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டேனென்றார் - காசி
சென்று
திரும்பிய மாமாவுமே.
இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே
ஏதேனும்
ஒன்றினை விட்டுவந்தார்.
அப்படி நீயுமே விட்டதென்ன? - தாத்தா.
அவசியம்
கூறிட வேண்டு”மென்றான்.
|