பக்கம் எண் :

மலரும் உள்ளம்163

பரீட்சை முடிவு

சோமு, சுந்தர் இருவரும்
   தோழ ராக இருந்தனர்.
சோமு நன்கு படிப்பவன்
   சுந்தர் மிகவும் மண்டுதான்!

வருட முடிவுப் பரீட்சையும்
   வந்து விட்ட தாகையால்,
இரவும் பகலும் மாணவர்
   இடைவி டாமல் படித்தனர்.

அன்று காலை சோமுவை 
   அழைத்துச் சுந்தர் கூறினன்;
“இன்று நடக்கும் பரீட்சையில் 
   எனக்கு நீயும் உதவுவாய்.

பார்த்தே எழுதக் காட்டினால்,
   பரீட்சை தன்னில் தேறுவேன்.
சேர்ந்தே அடுத்த வகுப்பிலும் 
   சென்று நாமும் படிக்கலாம்”