சுந்தர் இதனைச் சொன்னதும்
சோமு தலையை ஆட்டினன்.
அந்த விதமே செய்திட
அவர்கள் திட்டம் போட்டனர்.
சோமு முன்னால் இருந்தனன்.
சுந்தர் பின்னால் அமர்ந்தனன்.
சோமு விடைகள் எழுதியே
சுந்தர் பார்க்க வைத்தனன்.
பார்த்துப் பார்த்து சுந்தரும்
பரீட்சை முழுவதும் எழுதினன்.
தேர்ச்சி பெறுவோம் என்றனர்.
திருப்தியோடு திரும்பினர்.
பள்ளிக் கூடம் திறந்ததும்,
பரீட்சை முடிவை அறியவே,
துள்ளி ஓடி வந்தனர்,
சோமு சுந்தர் இருவரும்.
பள்ளி முன்னால் தொங்கிய
பலகை காணப் பலரையும்
தள்ளிக் கொண்டு சென்றனர்;
தங்கள் பேரைத் தேடினர்.
|